விஜய்யின் கடைசிப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ்?

Date:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’(கோட்). இதில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்தக் கட்சி 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் ‘தி கோட்’ படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். அது அவருடைய கடைசிப் படம் என்று கூறப்படுகிறது. அதை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். விஜய்யின் 69- வது படமான இதில், நாயகிகளாக சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய்யுடன் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் ஏற்கெனவே சமந்தா நடித்துள்ளார். விஜய்யின் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்