தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீட்டுக்கு கோட்டா, மஹிந்தவிடம் நட்டஈடு கோரும் வர்த்தகர்!

Date:

முறையான நிதி முகாமைத்துவம் இன்மையால் தனது தொழிலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் வர்த்தகர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக  இழப்பீட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமக்கு ஏற்பட்ட நிதி சேதத்திற்காக வர்த்தகர் கோரிய இழப்பீட்டுத் தொகை 50 மில்லியன் ரூபா.

கலிங்க சில்வா என்ற வர்த்தகர், 2019 மற்றும் 2022 க்கு இடையில் தனது தொழிலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு 50 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக இந்த இழப்பீட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நவாட் கப்ரால் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஏனைய பிரதிவாதிகளாவர்.

முன்னைய அரசு முறையான நிதி நிர்வாகத்தை பராமரிக்கத் தவறியதால் தனது வணிகம் சேதமடைந்ததாக தொழிலதிபர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 14 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால் வழக்குத் தொடரப்பட்டு இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய அந்த கடிதத்தை அனுப்பியுள்ளர்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் மற்றவர்களும் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அக்காலப்பகுதியில் தனது வர்த்தகம் சரிவடைந்தமையினால் ஏற்பட்ட நட்டஈட்டை மீளப்பெற தீர்மானித்ததாக சில்வா தனது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதிக்கான தடை மற்றும் தினசரி மின்வெட்டு காரணமாக இறக்குமதி தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தனது வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்