40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Date:

மின்னேரிய பிரதேசத்தில் ஏப்ரல் 14 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்ற போதே சுடப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யுவதி கடந்த 14ஆம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அவரது காதலன் என கூறிக்கொண்ட 40 வயதான நபரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் மின்னேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹிகுராக்கொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்