பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று (24) ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துதல், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவித்தல், அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற பல விடயங்களுக்கு தடைவிதித்து இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1