தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பொட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 195 ரன்கள் எடுத்து, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை சமன் செய்ய காரணமான, இலங்கை கப்டன் சாமரி அத்தபத்து, ஐசிசி மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான அத்தபத்துவின் பிரமிப்பான அந்த சதம், அவரது ஒன்பதாவது ஒருநாள் சதமாகும். இது பெண்கள் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோராகும்.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்காவின் லாரா வால்வார்ட் தரப்படுத்தலில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகள் கப்டன் ஹேலி மேத்யூஸ், கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களை குவித்ததுடன், பந்துவீச்சில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியதன் மூலம், துடுப்பாட்ட தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்தார். சகலதுறை வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார்.