யாழ்ப்பாணம், குறிகட்டுவான்- நயினாதீவுக்கிடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகில் பொதுமக்களின் உதவியுடன் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்ததாக வெளியான தகவல்- திரிவுபடுத்தப்பட்ட தகவல் என்பது தெரிய வந்தது.
இந்த படகில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட இளம் பெண்ணொருவர், வைத்தியர் மற்றும் தாதியரின் உதவியுடனேயே குழந்தை பிரசவித்துள்ளார்.
இது குறித்து நயினாதீவு வைத்தியசாலை பொறுப்பதிகாரியால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.






