விகாரைக்குள் சம்பவம்: தானமாக வழங்கப்பட்ட பழங்களில் கசிப்பு காய்ச்சிய பிக்கு!

Date:

தானமாக வழங்கப்படும் பழங்களை பயன்படுத்தி விகாரை வளாகத்தினுள் கசிப்பு காய்ச்சிய பிக்கு ஒருவர் இமதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமதுவ, பங்கிரிஹேன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் 57 வயதான பிக்கு ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு வியாழன் (18) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ரூ. 35,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2021 இல் குருத்துவத்தில் நுழைவதற்கு முன்னர், சட்டவிரோத மதுபான வியாபாரம் செய்ததாக பிக்குவுக்கு முன்னர் குற்றச்சாட்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இமதுவ பொலிஸாருக்கு தகவலறிந்த ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பிக்கு தங்கியிருந்த அறையினுள் இருந்து 18,000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிக்கு எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி கசிப்பு உற்பத்தி செய்துள்ளதாகவும், விசாரணையின் போது பிக்கு தனது தனிப்பட்ட பாவனைக்காக இந்த சட்டவிரோத மதுபானத்தை காய்ச்சியதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்