பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Date:

ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரெஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஓப்பனர்களாக ஜானி பேர்ஸ்டோ – அதர்வ தைடே களமிறங்கினர்.

27 ரன்களைச் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை 4வது ஓவரில் அவேஷ் கான் பிரித்தார். அதர்வ தைடே 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களில் கிளம்பினார். ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களுக்கு விக்கெட்டாக, சாம் கரன் 6 ரன்களில் அவுட்டானார்.

ஷசாங்க் சிங் 9 ரன்கள், ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் என நிலைக்காமல் கிளம்ப அஷுதோஷ் சர்மா மட்டும் அணியில் அதிகபட்ச ஸ்கோராக 31 ரன்களைச் சேர்த்தார். அவரின் 3 சிக்சர்கள் பெரும் நம்பிக்கையூட்டியது. இறுதியில் அவரும் விக்கெட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 147 ரன்களைச் சேர்த்தது.

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – தனுஷ் கோட்டியன் இருவரும் ஓபனிங் ஆடினர். இதில் ஜெய்ஸ்வால் 39 ரன்கள், தனுஷ் 24 என இந்த ஜோடி நிதானமாக தொடங்கியது.

அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்கள், ரியான் பராக் 23 ரன்கள் துருவ் ஜுரேல் ஆறு ரன்கள் என ஒவ்வொருவராக வெளியேற, ஷிம்ரோன் ஹெட்மயர் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் ராஜஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டார்.

19.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்