கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் இன்று (14) ஹாலிஎல ஸ்ரீ வீர சக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஐம்பத்தொன்று மற்றும் அறுபத்திரண்டு வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




