ரூ.3798 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டன!

Date:

கடந்த 12ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த மீன்பிடி படகுகளில் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் மற்றும் 179 கிலோ 90 கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 3798 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதைப்பொருள்களுடன் இலங்கை மீன்பிடிக் கப்பல் ஒன்று ஆறு சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் பரிமாற்றம் செய்ய வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு கப்பல்களையும் இலங்கைக்கு தெற்கே உள்ள தேவந்தர முனையிலிருந்து சுமார் 133 கடல் மைல் தொலைவில் உள்ள காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கப்பல்கள் மற்றும் போதைப்பொருள் இருப்புக்கள் என்பன பரிசோதிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்