ஈரான் மீதான இஸ்ரேலிய எதிர்த்தாக்குதல்களுக்கு அமெரிக்கா உதவாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியதாக மூத்த நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்குள் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலையடுத்து, பிடன் மற்றும் நெத்தன்யாகு இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் போது இந்த செய்தி அனுப்பப்பட்டது.
எந்தவொரு இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலையும் அமெரிக்கா எதிர்க்கும் என்று பிடன் நெத்தியன்யாகுவிடம் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தகைய எதிர் நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடன் கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.




