25 C
Jaffna
January 30, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வாழ்வுரிமைக்காக போராடிய பூநகரி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் சண்டித்தனம்; 6 பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து சென்றும் திட்டம் பிசுபிசுப்பு: அதிர்ச்சி வீடியோ!

பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல்
அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்குதல் மேற்காண்டுள்ளதாக
பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனது ஆதரவாளர்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்று, பொன்னாவெளி மக்களின் எதிர்ப்பை அடக்கி, சூழலுக்கு பாதிப்பேற்படுத்தும் சுண்ணக்கல் அகழும் அமைச்சரின் முயற்சியை பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நிதானமிழந்த அமைச்சர், பொதுமக்களுடன் முரட்டுத்தனமாக நடக்க எத்தனித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வு திட்டம் கடந்த நல்லாட்சி அரசில்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் எதிர்ப்பினால், அந்த திட்டம் முன்னகரவில்லை.

எனினும், தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டில்- சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் சூழல் விரோத நடவடிக்கையென வர்ணிக்கப்பட்ட இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வு, கடலட்டை வளர்ப்பு என ஈ.பி.டி.பியினர் பணம் கிடைக்கும் வழிகளை மட்டும் குறிவைக்கிறார்கள்- இயற்கையை அழித்து, பிரதேசத்தையும், சமூகத்தையும் ஆபத்தில் தள்ளுகிறார்கள் என்ற பலத்த விமர்சனங்கள் இருக்கும் நிலைமையில், புதிதாக பொன்னாவெளியிலும் ஈ.பி.டி.பி தலையீட்டில் சுண்ணக்கல் அகழ்வு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப கட்டமாக இன்று (05) பகல் 1 மணியளவில் கனிய வளத்திணைக்களத்தினால் அளவீடுகள் மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கனியவளத்திணைக்களம் உட்பட 11 திணைக்களங்கள் பொன்னாவெளி
கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளவுள்ள இடத்திற்கு சென்றிருந்த
போது அங்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் பொது
மக்கள் அளவீட்டு பணிகளுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு ஆறு பஸ்களில் வெளிப் பிரதேசங்களில் இருந்து ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர் அவர்களுடன் சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போராட்டத்தில் முன்வரிசையில் நின்ற இருவர் மீது பாய்ந்து முட்டித்தள்ள முயன்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இருந்து ஆறு பஸ்களில் அழைத்து
வரப்பட்ட தனது ஆதரவாளர்களை கொண்டு பொன்னாவெளி மக்கள் மீது தாக்குதல்களை
மேற்கொண்டு சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளும் கம்பனிக்கு ஆதரவாக
கடற்றொழில் அமைச்சர் செயற்பட்டார் என போராட்டத்தில் கலந்துகொண்ட பொது
மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தை காட்டி சுண்ணக்கல் அகழ்வின் ஆரம்ப பணிகள் பெருமளவு மக்களின் ஆதரவுடன் நடந்துள்ளது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கவும் அமைச்சர் இதனை மேற்கொண்டார் என்றும் பொன்னாவெளி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களிடம் சுண்ணக்கல் அகழ்வுக்கு
எதிரான எமது போராட்டத்தை பற்றி தெளிவுப்படுத்திய போது அவர்கள்
அங்கிருந்து விலகி சென்றுவிட்டனர் எனவும் பொன்னாவெளி மக்கள்
தெரிவித்தனர்.

கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்களுக்கு வியாபார நிலையங்கள் வழங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அங்கு வியாபார நிலையங்கள்
பெற்றவர்கள், கடலட்டை பண்ணைகளை பெற்றவர்கள் என அமைச்சரிடம் நன்மை
பெற்றவர்களே வெளிப் பிரதேசங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், கூட்டம் ஒன்றுக்கு வருமாறே தாம் அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள்
தெரிவித்தனர் என்றும் பொன்னாவெளி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இருப்பினும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த கனியவளத் திணைக்களம்
உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சரின் குழுவினரை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவிடாது தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர் பொன்னாவெளி
பொது மக்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment