26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்தாவிட்டால் 25ஆம் திகதி முதல் போராட்டம்

யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மஜகர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது-

தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா அரச உயர் மட்டம் வரை மஜகர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை.

ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மஜகருக்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம்.

எமது மஜகருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக திட்டமிட்டுள்ளோம் என குறித்த மஜகரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் போராட்டத்தில் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே இந்திய அரசே தமிழக ரோலரை தடுத்து நிறுத்து தொப்புள் கொடி உறவே நமது கடல் வளத்தை அழிக்காதே என்ற வாசகங்களை ஏந்தியவாறு கண்டன போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆறுமுகம் கனகசபை யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் உப தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்சிஸ் ரட்னகுமார் உட்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

Leave a Comment