புகை வந்ததால் தரையிறக்கப்பட்ட விமானம்!

Date:

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து நேற்று (12) கொழும்பு நோக்கி புறப்பட்ட யுஎல் 605 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் UL605 திங்கள்கிழமை மாலை 6:30 மணிக்குப் பிறகு புறப்பட்டது, ஆனால் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் அவசரநிலையை அறிவித்தது.

இதை தொடர்ந்து, மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானி அறையில் புகை கிளம்பியதையடுத்தே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மெல்பேர்ன் நேரப்படி இன்று மாலை 18.16 மணிக்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து, தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் மீண்டும் புறப்படும் வரை அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்