யாழில் தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் தனியார் கல்வி நிலையமொன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியிலுள்ள தனியார் ஆங்கில கல்வி வகுப்பொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

புத்தூர், ஜனசக்தி கிராமத்தை சேர்ந்த 13 வயதான மாணவன் ஒருவரே தாக்கப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24வது விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார்.

மாணவன் நேற்று (8) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் மாணவனின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிசார், நாளை (10) அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ய மாணவனை அழைத்துள்ளனர்.

மாணவனின் முறைப்பாட்டின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்