அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இதன் தலைவராக கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் இன்றையதினம் (09) சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய செஹான் சேமசிங்க, சீதா அரம்பேபொல, சுரேன் ராகவன், அனுப பஸ்குவல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, விஜித ஹேரத், மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திசாநாயக்க, சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா, ஹர்ஷ த சில்வா, நிமல் லான்சா, எம்.ஏ. சுமந்திரன், கவிந்த ஹேஷான் ஜயவர்தன, மயந்த திசாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, யூ.கே. சுமித் உடுகும்புர, பிரதீப் உந்துகொட, இசுரு தொடன்கொட , பிரேம்நாத் சி. தொலவத்த, மதுர விதானகே, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




