எதிர்ப்பு மற்றும் போதிய நபர்கள் முன்பதிவு செய்யாததால் இந்திய நடிகை தமன்னாவுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.
நடிகை ரம்பாவின் கணவர் யாழ்ப்பாணத்தில் தொடங்கியுள்ள தனியார் உயர்கல்வி நிலையத்திற்கான விளம்பரத்துக்காக யாழ்ப்பாணத்தில் இன்று இந்திய திரையுலகத்தில் தற்போது முன்னணியில் இல்லாத நட்சத்திரங்கள் சிலர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை வைத்து கல்லா கட்ட நினைத்த ரம்பா கணவர் நிறுவனம், தமன்னா உள்ளிட்டவர்களுடன் புகைப்படம் எடுக்க ரூ.30,000 செலுத்த வேண்டுமென அறிவித்தல் விடுத்தனர்.
இதற்கு பல மட்டங்களிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், இன்று புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் யார் கலந்து கொள்கிறார்கள் என பத்திரிகையாளர்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ரூ.30000 செலுத்தி புகைப்படம் எடுக்க ஓரிருவரே முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்வு இரத்து செய்யப்படும் ன நினைத்த பலர் முன்பதிவு செய்யாமல் விட்டனர்.
இதனால் தமன்னாவுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை ரம்பா கணவன் நிறுவனம் இரத்து செய்தது.




