வரலாற்று சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரபொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த பொங்கல் உற்சவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு மற்று சுகாதாரவசதிகளை உள்ளிட்ட பொங்கலின் போது மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் றூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் போக்கு வரத்து துறையினர், மின்சார சபை உத்தியோகத்தர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், பொங்களுடன் தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறையும் பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கும் வைபவம் புத்தூர் சந்தி மீசாலையிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பங்குனி மாதம் 17ம் திகதி விளக்கு வைப்புடன் ஆரம்பமாகி அன்று பிற்பகல் பண்ட வண்டில்கள் புத்தூர் சந்தி நோக்கி சென்று பொங்கல் அன்று 24.02.2024 பண்ட வண்டில்கள் ஆலயத்தை வந்தடையும் பாரம்பரியமாக மேற்கொள்ளும் பொங்கள் நிகழ்வு நடைபெறும்.