தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது.
மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை நிறுத்துவோம் என தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் நன்பகல் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுநர் தற்போது யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் இன்று சந்திக்க முடியாது எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்கமுடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.