கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த கார், கொள்கலனை முந்திச் செல்லும்போது, காரின் இடது பக்கம் கொள்கலனுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதற்குள் இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.





