புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாள் பூட்டு!

Date:

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவு விட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்