யாழில் அளவுக்கு அதிகமான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்திய இளைஞன் பலி!

Date:

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியை ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் அதிகளவான போதைக்கு அடிமையானவர்.

கலட்டி பகுதியில் நேற்று (23) உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியுள்ளார்.

அளவுக்கதிமான ஹெரோயின் செலுத்தப்பட்டதால் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது தலையில் சிறு காயங்கள் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பிரதேசவாசிகளால் எழுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்தியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடலில் ஊசி செலுத்திய அடையாளங்கள் காணப்பட்டன.

போதை ஊசி செலுத்திய பின் அவர் நிலத்தில் விழுந்த போது, தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்