31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு!

Date:

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10 வீதம் கழிவு வழங்கப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

ஆகையினால் நடப்பாண்டுக்கான தமது சோலை வரிகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மொத்தமாக செலுத்தி, இந்த சலுகையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலக Onestop Service கரும பீடங்களில் அலுவலக நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கால தாமதமின்றி இலகுவாக இதனை செலுத்த முடியும் என மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்