இசைச்சுற்றுலா…. குழுவினருடன் இலங்கை வந்தடைந்தார் இளையராஜா!

Date:

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா 6 நாள் இசைப் பயணமாக இலங்கை வந்துள்ளார்.

இளையராஜா கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று பிற்பகல் நாட்டை சென்றடைந்தார்.

1976 முதல் 1,500 படங்களுக்கு மேல் பின்னணி இசை வழங்கியுள்ள இளையராஜா, தமிழ் திரையிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்று இளையராஜா கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தெரிவித்தார்.

இளையராஜாவுடன் 7 பாடகர்கள் மற்றும் 27 இசைக்கலைஞர்களும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலிலும், 27 மற்றும் 28ஆம் திகதிகளில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிலும் இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

இந்த குழுவினர் இன்று மாலை 05.25 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-128 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்