ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமைக்கு எதிராக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி அவர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் முடிவை இரத்து செய்யும் தீர்ப்பைக் கோரி அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இரண்டு அமைச்சர்களும் ஐக்கிய மக்கள் சக்தி அவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநீக்கம் செய்து, அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கியதற்கு எதிராக FR மனுவை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இரண்டு அமைச்சர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து, இரண்டு அமைச்சர்களையும் கட்சியிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்தது.