உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க நடவடிக்கை!

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு கொண்டாடும் போது இதற்கான முதல் படி எடுக்கப்படும் என்றார்.

“ஏப்ரல் 21, 2019 அன்று தேவாலயங்களில் இறந்தவர்கள் தாங்கள் நம்பியதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அன்று அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தேவாலயத்திற்கு வந்தனர். மற்ற புனிதர்களைப் போல கிறிஸ்துவை நேசித்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்,” என்று அவர் கூறினார்.

“ஒருவர் தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று பெயரிட முடியும். எனவே, ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை நோக்கி நகர்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.

“கிறிஸ்தவம் என்பது தேவாலயங்களில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது மட்டுமல்ல. நாம் நீதிக்காக நிற்க வேண்டும். மற்றவர்களின் நீதிக்காக நாம் பேச வேண்டும். இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் திருச்சபை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தனது திருமறையில் நமக்குக் கற்பித்துள்ளார்” என்றும் கர்தினால் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தாயின் தாலிக்கொடியை திருடி காதலனிற்கு கொடுத்த பணம்; உறவுப்பெண் மீது பழிபோட்டு நாடகம்: வங்கி ஊழியரான 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை...

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்