25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
கிழக்கு

காயான்கேணியில் மினி சூறாவளி

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரை பிரதேசத்தில் இன்று (6) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக படகுகள் சில சேதமடைந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை வேகமான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரையோரப் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் 06 படகுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு படகு அதன் இயந்திரம் போன்றன பெருமளவு சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனையவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் ஓலைக் கொட்டில் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசைகள் என்பன சேதமடைந்து காணப்படுகிறன. சேதமடைந்த தங்களது படகினை திருத்தம் செய்து மீள பாவிப்பதற்கு தங்களிடம் போதியளவு பணமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அச்சம் காரணமாக மீனவர்கள் இன்று அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லவில்லை.

சம்பவம் பற்றி வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

அம்பாறையில் போராட்டம்

Pagetamil

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு

east pagetamil

உரிமை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

east pagetamil

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

east pagetamil

Leave a Comment