இலங்கை போக்குவரத்துசபையின் வடபிராந்திய முகாமையாளராக நியமிக்க தகுதி வாய்ந்த தமிழ் பேசுபவர்கள் இருந்தாலும், அவர்கள் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளதால் இழுபறியேற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இன்று (4) இ.போ.சவின் கோண்டாவில் சாலையில் ஊழியர்கள் மத்தியில் தெரிவித்தார்.
எனினும், தமிழ் பேசும் ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்று, தண்டப்பணம் செலுத்துவதால், அவருக்கு மன்னிப்பளித்து, வடபிராந்திய முகாமையாளராக நியமிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய முகாமையாளரை ஒரு வாரத்தில் நியமிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, இ.போ.ச உத்தியோகத்தர் ஒருவர், அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். சில குற்றச்சாட்டுக்களில் சிக்கி, மேன்முறையீடு செய்தவர்கள், பிராந்திய முகாமையாளருக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருந்தபடி, பிராந்திய முகாமையாளரின் கடமைகளை ஆற்றலாமா என கேள்வியெழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்காமல், சிரித்தபடி சென்றார்.