இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி வளாகங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கடந்த புதன் கிழமை மூன்று நாள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுமாறு நீதவான் திலின கமகே அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1