மக்களை ஏமாற்றும் வேலையை ஆரம்பித்துள்ள அரசு!

Date:

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்கம் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தில் பத்து வீத நிவாரணத்தை வழங்கவுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டை தேர்தல் ஆண்டாக அரசு அறிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக, எவ்வளவு வரிகள் அதிகரிக்கப்பட்டாலும், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அரசு முயல்கிறது. அதற்குக் காரணம் அடுத்தது தேர்தல் ஆண்டு.

குருநாகலில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்மூலம் மக்களை ஏமாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளது என்பது தெளிவாகின்றது. முதல்கட்டமாக ஜனவரி முதல் மின்கட்டணத்தில் பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருளின் விலையை ஓரளவு குறைக்கும் நம்பிக்கை இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்