24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

காசாவின் அதிகாரத்தை ஒப்படைக்கும் எகிப்து யோசனையை நிராகரித்தது ஹமாஸ்

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஈடாக காசா பகுதியில் அதிகாரத்தை கைவிட வேண்டும் என்ற எகிப்திய முன்மொழிவை ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணி இஸ்லாமிய ஜிஹாத் நிராகரித்துள்ளதாக இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் திங்களன்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

கெய்ரோவில் எகிப்திய மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் இரு குழுக்களும், ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றபோது கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் சாத்தியக்கூறுகளுக்கு அப்பால் எந்த சலுகையும் வழங்க மறுத்துவிட்டனர்.

மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக போர்நிறுத்தத்தை உள்ளடக்கிய ஒரு “பார்வையை” எகிப்து முன்மொழிந்தது. இது, காசாவில் ஹமாஸ் தலைமையை மாற்றியமைப்பதுடன் நிரந்தர போர்நிறுத்தத்தை உள்ளடக்கிய பரந்த உடன்படிக்கைக்கு வழிவகுக்கும்.

காசாவில் புதிய தேர்தலை எகிப்து முன்மொழிந்தது. அதே நேரத்தில் காசாவின் அதிகாரத்திலிருந்து அகற்றப்படும் ஹமாஸுக்கு அதன் உறுப்பினர்கள் துரத்தப்பட, வழக்குத் தொடரப்பட மாட்டர் என்று உறுதியளித்தனர்.

ஆனால் பணயக்கைதிகளை விடுவிப்பதைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் குழு நிராகரித்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காசாவில் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

சமீபத்தில் கெய்ரோவுக்குச் சென்ற ஹமாஸ் அதிகாரி ஒருவர், தற்காலிக மனிதாபிமான ஒப்பந்தங்கள் குறித்த குறிப்பிட்ட சலுகைகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்க மறுத்து, அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதன் மூலம் ஹமாஸின் நிராகரிப்பை சுட்டிக்காட்டினார்.

“ஹமாஸ் எங்கள் மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறது, அதைச் செய்வதற்கான வழிகளை நாங்கள் எங்கள் எகிப்திய சகோதரர்களுடன் விவாதித்தோம்” என்று அந்த அதிகாரி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

“எங்கள் மக்களுக்கான உதவிகள் தொடர வேண்டும் மற்றும் அதிகரிக்க வேண்டும் என்றும் அது வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

“ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, உதவி அதிகரித்த பிறகு, கைதிகள் இடமாற்றம் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

காசாவில் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் இஸ்லாமிய ஜிஹாத் அந்த நிலைப்பாட்டை எதிரொலித்தது.

அதன் தலைவர் ஜியாத் அல்-நகாலா தலைமையிலான ஒரு இஸ்லாமிய ஜிஹாத் தூதுக்குழு தற்போது கெய்ரோவில் கைதிகளை மாற்றுவதற்கான சலுகைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து எகிப்திய அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளது, ஆனால் ஒரு முன் நிபந்தனையாக பேச்சுக்கு முன்னர், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு கைதி இடமாற்றமும் “அனைவருக்கும்” என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என இஸ்லாமிய ஜிஹாத் வலியுறுத்துகிறது. அதாவது ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் மூலம் காசாவில் வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் இஸ்ரேலில் சிறையில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் விடுவிப்பதற்கு ஈடாக விடுவிக்க வேண்டும்.

போருக்கு முன்பு, இஸ்ரேலிய சிறைகளில் 5,250 பாலஸ்தீனியர்கள் இருந்தனர், ஆனால் ஒக்டோபர் 7 முதல் மேற்குக் கரை மற்றும் காசாவில் ஆயிரக்கணக்கானவர்களை இஸ்ரேல் கைது செய்ததால், அந்த எண்ணிக்கை இப்போது 10,000 ஆக உயர்ந்துள்ளது என்று பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

Leave a Comment