இலங்கையை இளித்தவாயர்கள் என நினைத்தார்களா இந்த வெளிநாட்டு ஜோடி?: காப்புறுதி பணத்துக்காக செய்த வேலை!

Date:

தமது நாட்டின் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கைக்கு வந்து, ஆணொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக நாடகம் ஆடிய ருமேனிய தம்பதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த இந்த ஜோடி, மசாஜ் செய்யும் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக நாடகம் ஆடியுள்ளனர்.

சுற்றுலா சேவை நிறுவனம் ஊடாக 8 நாள் பயணமாக இலங்கைக்கு வந்திருந்த ருமேனிய தம்பதியினர் கடந்த 24-25 ஆம் திகதிகளில் திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இன்று (26) கண்டிக்கு செல்லவிருந்ததாக சுற்றுலா விடுதியினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த சுற்றுலா விடுதியில், கடந்த 24ஆம் திகதி, விலையுயர்ந்த அறையை, தம்பதியர் முன்பதிவு செய்திருந்தனர். அதே இரவில், 35 வயதான ரோமானிய பெண், மசாஜ் செய்ய விரும்புவதாக கூறினார். அங்கு, ஹோட்டலின் மசாஜ் பிரிவில் பணிபுரியும் ஒரு பெண்ணின் சேவையை ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு வழங்கியது. இங்கு அந்த பெண் ஹோட்டல் நிர்வாகத்திடம் தனக்கு ஆணின் சேவை வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க, மசாஜ் துறை ஊழியர் ஒருவர் சேவை வழங்கியுள்ளர். அப்போது, அந்த பெண் அலறியடித்தபடி மசாஜ் பிரிவில் இருந்து வெளியே ஓடிச் சென்றுள்ளார். தனது அறைக்கு சென்றுகுளித்துவிட்டு, சிறிது நேரத்தில், ஹோட்டலின் மனிதவள மேலாண்மை பிரிவுக்கு சென்று, மசாஜ் செய்த நபர் தம்மை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக தெரிவித்ததையடுத்து ஹோட்டல் நிர்வாகம் திம்புல பத்தனை பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

ஹோட்டலுக்கு வந்த பொலிசார் முறைப்பாட்டாளரான ரோமானியப் பெண்ணின் புகார் குறிப்புகளை பதிவு செய்த முயன்றனர்.

இந்த விடயத்துக்காக முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், தமது நாட்டிலிருந்து காப்புறுதிப் பணத்தையும், இலங்கைக்கு வந்த விமானப் பயணச்சீட்டுக்கான பணத்தையும் பெற்றுக் கொள்ள, சம்பவம் தொடர்பில் இந்நாட்டில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் எழுத்து மூலமான கடிதத்தை சான்றளிக்குமாறு கோரியுள்ளார்.

ஹோட்டலை விட்டு வெளியேறும் வரை பணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என்றும் ஹோட்டல் நிர்வாக அதிகாரியிடம் அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.அந்த கோரிக்கையையும், சட்டத்தரணி கடிதத்தையும் வழங்க ஹோட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது

இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்வதே இலங்கை நடைமுறையென ருமேனிய தம்பதியிடம் ஹோட்டல் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ருமேனிய தம்பதிகளை ஹோட்டலுக்கு பரிந்துரைத்த சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு ஹோட்டல் நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக சுற்றுலா விடுதியினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்