மன்னார் புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Date:

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் இன்று (23) புதிய அரச அதிபராக தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் மன்னாரின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஆலயங்களுக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வின் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்