காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் இருந்து நேற்று (15) மீட்கப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நிரோசன் (29) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1