கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் வீடு உடைத்து 47 பவுண் தங்கநகைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
கடந்த நவம்பர் 29ஆம் திகதி இந்த திருட்டு சம்பவம் நடந்தது. வீட்டிலிருந்த 88,60,000 ரூபாய் பெறுமதியான 47 பவுண்தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
கிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்
ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண்
நகைகள் திருடப்பட்டுள்ளாக கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட பொலீஸார் பிரதான சந்தேக நபர் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் ஒருவரை கைது
செய்துள்ளனர்.
பொலீஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து பொலீஸ் விசேட பிரிவின்
விஷேட பிரிவின் உத்தியோகத்தர் கான்ஸ்டபிள் S.A விவேகானந்தர் என்பவரின்
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பிரிவின்
குற்றவிசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கருணரத்தினம் ஜசிந்தன்
தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒபேசேகர, மென்டிஸ், மயூரவதனன், குகனேந்திரன், குமார, ரணதுங்க, லாவண்யா மற்றும் விஷேட பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி பந்துசேன, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுசுந்த, வினோஜன், ரோஜ், பிரசாந் ஆகிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அம்பாள்குளம், கிளிநொச்சியில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி
இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த திருடப்பட்ட தங்க நகைகளின்
ஒரு பகுதி மற்றும் IPhone 11 ஒன்றும், 198 000 பணம் மற்றும் ஹெரோயின்
430mg ,மகேந்திரா வாகனம் என்பனவற்றை கைப்பற்றியதுடன் உதயநகர்
பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ளார்.