வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Date:

அண்மைய ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுப்பு எடுத்துள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களில் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் வெளிநாடு செல்லாமல், இலங்கையில் வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாகத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, அந்தந்த வருடங்களில் வெளிநாட்டு விடுமுறை எடுத்தவர்கள் ஏழு பேரைத் தவிர வேறு எவரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 80, பேராதனையில் 41, ஜயவர்தனபுர 35, களனி 54, திறந்த பல்கலைக்கழகத்தில் 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 81 என பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்