25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
குற்றம்

A/L மாணவியை கர்ப்ப பரிசோதனைக்கு அழைத்து சென்ற மந்திரவாதி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை!

நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி, அத்துருகிரிய பொலிஸ் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹோமாகம, பனாகொட, ரொமியேல் மாவத்தையில் வசிக்கும் லலித் சூரிய குமார என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரணசிங்க ஆராச்சி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யுவதி ஒருவருக்கு அவ்வப்போது ஏற்படும் நோயை குணப்படுத்தும் நோக்கில் பனாகொட ரொமியேல் மாவத்தையில் உள்ள மந்திரவாதியிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். பல தடவைகள் தன்னிடம் இவ்வாறு சிகிச்சை பெற்றும் குணமடையாத காரணத்தினால் அந்த யுவதியை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மந்திரவாதி கூறியுள்ளார்.

அதன்படி கடந்த ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் சிறுமி மந்திரவாதியின் வீட்டில் நிறுத்தப்பட்டு சிகிச்சையை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி பிற்பகல், தெமகொட பிரதேசத்தில் உள்ள மருத்துவ நிலையமொன்றினால் யுவதியின் தாயாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், குறித்த யுவதி கர்ப்பமாக உள்ளாரா என்பதை பரிசோதிப்பதற்காக ஒருவர் வைத்திய நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அவரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறுமியின் தாயார் உடனடியாக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்து, அத்துருகிரி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியுடன் தெமட்டகொட மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சந்தேக நபரை தடுத்து வைத்தனர்.

பின்னர், சந்தேகநபரையும், இளம் பெண்ணையும் அத்துருகிரிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர் பொலிஸ் அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் மீட்கப்பட்டு 1990 அம்புலன்ஸில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, நோயாளியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரை சிறையில் அடைத்தபோது, ​​மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கு இருந்தனர்.

வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி என்றும் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!