யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரத்தில் தனியார் வங்கியொன்றில் மின்சாரம் தாக்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) பகல் இந்த சம்பவம் நடந்தது.
சாவகச்சேரி நகரத்திலுள்ள தனியார் வங்கியில் இன்று மின்சார மோட்டார் பழுதடைந்துள்ளது. அதன் திருத்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது, தண்ணீர்தாங்கியின் தண்ணீர் அளவை பார்க்க சென்ற வங்கி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாங்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதன்போது, தலையில் ஆணியொன்றும் தாக்கியுள்ளது.
அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இதன்போது நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான நித்தியானத்தன் கஜலக்சன் என்ற இளைஞனே உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1