கிளிநொச்சியில் மாவீரர்நாளுக்கு தடைகோரும் பொலிசார்: திங்களன்று கட்டளை!

Date:

மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தொடர்பான வழக்கு நீதவானால் திங்களன்றுக்கு திகதியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று (24) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் துயிலுமில்ல கட்டுமானம் உள்ளிட்ட சில விடயங்களை உள்ளடக்கி தடை உத்தரவினை பெறும் வகையில் பொலிசாரால் மன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டினை பார்வையிட்ட நீதவான், குறித்த வழக்கினை திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் துயிலுமில்லங்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லங்களில் இவ்வாறு தடை உத்தரவு பெறுவதற்கான விண்ணம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்