பாணந்துறை, ஹொரைதுடுவ பிரதேசத்தில் பொல்கொட ஆற்றில் இருந்து இன்று (14) காலை நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, பாணந்துறை, பரத்த பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியராக பணிபுரிந்தார்.
குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு 7.00 மணியளவில் மொரட்டுவ, திகரோல்ல பலமவிற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தனது பையை வைத்து விட்டு அந்த பாலத்தை நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது இந்த இளைஞன் திகரோல்ல பகுதியில் இருந்து பொல்கொட ஆற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை இழந்ததால் அவர் மனமுடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1