ஹோமாகம பிடிபன, சுபாபபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பந்து லியனகே இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற கிராம சேவகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் தராவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த போது, அதே பிரதேச கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1