த்ரிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘தி ரோட்’ திரைப்படம் இம்மாதம் 10ஆம் திகதி ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 6ஆம் திகதி வெளியான படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.
சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதைகளத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் 10ஆம் திகதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.