புறக்கோட்டை துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவர் குறித்த கடையில் பணிபுரிந்து வந்தவர்.
கடந்த 27ஆம் திகதி குறித்த துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலவாக்கலை வட்டகொட தோட்டத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது மகள் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த துணிக்கடையில் வேலைக்குச் சென்றதாகவும் அவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருப்பதாகவும் குடும்பத்தின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யுவதி தனது தாய் மற்றும் தந்தையின் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கும் வீட்டு செலவுக்கும் தேவையான பணத்தை அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுவதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்ததாகவும் உறவினர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி பயின்ற குறித்த யுவதி தனது கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தினால் துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இறந்த யுவதியின் உடல் இன்று இரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 5ம் திகதி இறுதி சடங்குகள் நடைபெறும்.