ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரும் அதனுடன் சென்ற மற்றுமொரு உலங்குவானூர்தியும் இன்று பிற்பகல் வெல்லவாய புதுருவகல பாடசாலை விளையாட்டரங்கில் திடீரென தரையிறங்கியுள்ளன.
வெலிமடை பகுதிக்கு பயணித்த ரணில் விக்கிரமசிங்க அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எதிர்பாராத தருணத்தில் ஹெலிகொப்டர் தரையிறங்கியதையடுத்து, அங்கு பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து வேறு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
வாகனம் வரும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தருவகல கல்லூரியில் தங்கியிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1