மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஜீப்: மாட்டப் போகும் முன்னாள் அமைச்சர்!

Date:

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஜீப் வண்டியை போலி ஆவணங்களை தயாரித்து பதிவு செய்து  விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரை கைது செய்ய பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு செயலணியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர் மற்றும் வாகன விற்பனை நிறுவன முகாமையாளருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபா பெறுமதியான ஜீப்பை லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

வாகன விற்பனை நிலைய முகாமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​முன்னாள் அமைச்சர் செய்த மோசடி தெரியவந்துள்ளதுடன், முன்னாள் அமைச்சரின் மற்றுமொரு மோசடி வாகனமும் கைப்பற்றப்பட உள்ளது.

இந்த ஜீப்பை விற்பனை செய்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கும் அதே மாகாணத்தில் உள்ள விசேட வைத்திய நிபுணர் ஒருவருக்கும் எதிராகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு இந்த ஜீப்பை சட்டவிரோதமான முறையில் முன்னாள் அமைச்சர் இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் போலி ஆவணங்களை தயாரித்து பதிவு செய்து 2022ம் ஆண்டு வரை பயன்படுத்தியுள்ளார்.

பின்னர், 2022 ஆம் ஆண்டில், வாகனம் ரகசியமாக விற்க கார் டீலரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஜீப்பிற்கு போலி ஆவணங்களை தயாரித்து பதிவு செய்த மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவும் கைது செய்யப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்