28 C
Jaffna
December 5, 2023
குற்றம்

தூக்கத்திலிருந்த கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியினால் வெட்டிய மனைவி

இராணுவ வீரரான தன்னுடைய கணவனின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியினால் வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது​ செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுர பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய நாலக சஞ்ஜீவ ஜயசூரியவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறும், உரிய மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார்.

பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் அவரது ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் காயமடைந்தவர் 1990 சுவாசரி அம்புலன்சில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை: வெட்டிக்கொன்ற மனைவி!

Pagetamil

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

Pagetamil

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

Pagetamil

பாலியல் ஊக்க மருந்துகளுடன் 61 வயது நபர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!