25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

சீனாவின் சினோபெக் நிறுவனம் அம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கிறது!

சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒப்பந்தம் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி ஏலச் செயல்பாட்டில் பங்கேற்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் இது திறந்திருக்கும் என்று அரசாங்கம் கூறினாலும், அந்த நிறுவனத்திற்கு இந்தத் திட்டம் வழங்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஒரு முன்கூட்டிய முடிவாகவே இருந்தது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, மற்றொரு சீன முதலீடான கொழும்பு போர்ட் சிட்டி, இலங்கையில் மிகப்பெரிய நேரடி முதலீட்டு திட்டமாக இருந்தது. சினோபெக் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும், ஆனால் சுத்திகரிப்பு நிலையத்தின் பிற தொடர்புடைய வளர்ச்சிகளில் பின்னர் அதிக பணம் செலுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டையில் ஆழ்கடல் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இருப்பினும், துறைமுகம் 2017 ஆம் ஆண்டில் சீன அரசுக்கு சொந்தமான ‘சீனா மெர்ச்சன்ட்ஸ்’ நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அண்மையில் சீன விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சினோபெக் குழுமத்தின் தலைவர் மா யோங்ஷெங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த வாரம் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். சினோபெக் ஏற்கனவே இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைந்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கான ஒரே போட்டியாளரான விட்டோல் சிங்கப்பூர் போட்டியிலிருந்து விலகியதால், சினோபெக் திட்டத்தில் எளிதாக நுழைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!