பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயர்வால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.20,000 சம்பள உயர்வு அல்லது ரூ.20,000 கொடுப்பனவு கோரி சுமார் 300 அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் செத்சிறிபாய, நாரஹேன்பிட்டி சந்தி, லிப்டன் சுற்றுவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் இன்று மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட போதிலும், 7 வருடங்கள் கடந்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், இந்தக் கோரிக்கைக்கு மேலதிகமாக 2016ஆம் ஆண்டு இழந்த முழு ஓய்வூதிய முறையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சூரியாராச்சி தெரிவித்தார்.




