’19 கொலைகள் செய்தேன்’

Date:

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் 19 ஒப்பந்த கொலைகளை செய்ததாக கூறியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாகந்துரே மதுஷ் உட்பட முன்னணி பாதாள உலக தலைவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றியதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய இந்த சந்தேக நபர், தங்கல்லே சுத்தா என அழைக்கப்படும் நிலந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் 19 கொலைகளை செய்ததாக கூறியுள்ள போதிலும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்