கிளிநொச்சி நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் தவிர்ந்த கனரக வாகனங்கள், ரிப்பர்கள், எரிபொருள் பவுசர்கள் அனைத்தையும் இரணைமடுச்சந்தியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோமீட்டர் வேகத்திலும், கார், வான் போன்ற நடுத்தர வாகனங்கள் 40 கிலோமீட்டர் வேகத்திலும், மோட்டார் சைக்கிள்கள் 50 கிலோமீட்டர் வேகத்திலும் மாத்திரம் நகரில் பயணிக்க கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், பரந்தன் பகுதியிலும் மேற்குறித்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.
அத்துடன், இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்ட மணல் அனுமதிப் பத்திரமானது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.